close
Choose your channels

2 போட்டியாளர்களுக்கு டிக்கெட் டு ஃபினாலே.. பிக்பாஸ் வைத்த பரபரப்பான டாஸ்க் இதுதான்..!

Tuesday, December 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் டிக்கெட் டு ஃபினாலே என்ற டாஸ்க் வைக்கப்படும் என்பதும் அந்த டாஸ்க்கில் வெற்றி வருபவர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் இந்த சீசனில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் இரண்டு நபர்கள் நேரடியாக இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று பிக் பாஸ் அறிவித்துள்ளார். இதற்காக வைக்கப்பட்ட டாஸ்க் தான் ஹியூமன் கடிகாரம்.

கடிகாரத்தை பார்க்காமலேயே பிக் பாஸ் கேட்கும் போதெல்லாம் மணி என்ன என்பதை சரியாக சொல்ல வேண்டும். வினாடிகளையும் நிமிடத்தையும் சரியாக கணக்கிட்டு மனதிற்குள் நேரத்தை கணக்கிட வேண்டும் என்பதுதான் டாஸ்க்.

இந்த டாஸ்க் ஜோடியாக போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர் மணி-ரவீனா, விஷ்ணு - விஜய் வர்மா, விக்ரம் சரவணன் - தினேஷ், பூர்ணிமா - விசித்ரா, மாயா - அனன்யா ஆகியோர் ஜோடி ஜோடியாக கலந்து கொள்கின்றனர். இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்படுபவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.