close
Choose your channels

நாமினேஷனில் சிக்கிய தாமரை-பிரியங்கா: இருவரில் ஒருவர் எலிமினேஷன் உறுதியா?

Monday, November 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் இதில் ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு போட்டியாளர்களை நாமினேஷன் செய்வார்கள் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் கடந்த சில நாட்களாக வெறுப்பேற்றும் வகையில் நடந்து வரும் தாமரை மற்றும் பிரியங்கா ஆகிய இருவரும் இன்று நாமினேஷன் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக இன்றைய முதல் இரண்டு புரமோவில் இருவரும் மோதிக் கொண்டது சக போட்டியாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

எனவே இவர்கள் இருவரும் நாமினேஷன் செய்யப்படுவார்கள் என்றும் அவ்வாறு சிக்கினால் இருவரில் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவது உறுதி என்றும் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான மூன்றாவது புரமோவில் கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களும் தாமரை மற்றும் பிரியங்காவை நாமினேஷன் செய்கின்றனர். எனவே இருவரும் நாமினேஷனில் சிக்கியுள்ளது உறுதியாகியுள்ள நிலையில் இந்த வாரம் இந்த இருவரில் ஒருவர் வெளியேறுவாரா? அல்லது வேறு யாரேனும் வெளியேறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.