close
Choose your channels

எப்படி நம்ம குத்து: 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு வேற லெவல் ஆட்டம் போட்ட 'பிக்பாஸ்' பிரபலம்!

Saturday, April 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற ’வாத்தி கம்மிங்’ பாடல் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் இந்த பாடலுக்கு பல பிரபலங்கள் நடனமாடியது குறித்த வீடியோக்கள் சமூக வலைத் தளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பதும் அந்த வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகருமான ஜித்தன் ரமேஷ் தற்போது ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

’எப்படி நம்ம குத்து’ கேப்ஷனுடன் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவில் ஜித்தன் ரமேஷ் தன் மகனுடன் வேற லெவலில் நடனம் ஆடி இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோவுக்கு லைக்ஸ்களும், கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos