close
Choose your channels

பிக்பாஸ் ஜூலியின் முதல் பட ரிலீஸ் திடீர் தள்ளிவைப்பு

Wednesday, January 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பங்கேற்பாளர்களான ஓவியாவுக்கு பாசிட்டிவ் புகழ் கிடைத்த நிலையில் அதே நிகழ்ச்சியின் இன்னொரு பங்கேற்பாளரான ஜூலிக்கு நெகட்டிவ் புகழ் கிடைத்தது. மேலும் ஓவியாவுக்கு விளம்பரங்கள் மற்றுன் திரைப்படங்கள் வாய்ப்பு வந்த மாதிரியே ஜூலிக்கும் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட வாய்ப்புகள் வந்தன.

இந்த நிலையில் ஜூலி விரைவில் ஒரு படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகவுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளிவந்தது. மேலும் அவர் விமல் நடித்த 'மன்னார் வகையறா' என்ற படத்தில் ஒருசிறு கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்த படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது திரையரங்குகள் கிடைக்காததால் இந்த படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியுள்ளது. இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாடம் இந்த படம் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.