close
Choose your channels

பிக்பாஸ் தமிழ் சீசன் 7: ஆடிஷனில் கலந்து கொண்ட விஜய் டிவி பிரபலங்கள்..!

Sunday, June 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் அதிகம் கலந்து கொண்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் விரைவில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் சில விஜய் டிவி பிரபலங்கள் ஆடிஷனில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து, வரும் ஆகஸ்ட் மாதம் 7வது சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த சீசனிலும் விஜய் டிவி பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சரத், பாவனா, மாகாபா மற்றும் உமா ரியாஸ் ஆகியோர் ஆடிஷனில் கலந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. உமா ரியாஸ் ஏற்கனவே விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். இவரது மகன் ஷாரிக் ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது தெரிந்தது.

அதேபோல் பாவனா சூப்பர் சிங்கர் உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் என்பதும் மாகாபா மற்றும் சரத்தும் விஜய் டிவி பிரபலங்கள் என்பது தெரிந்ததே.

மேலும் இவர்களுடன் நடிகை ரேகா நாயர் ஆடிஷனில் கலந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ‘இரவின் நிழல்’ படத்தில் நடித்த தன்னை மோசமாக விமர்சனம் செய்த பயில்வான் ரங்கநாதனை நடுரோட்டில் கேள்வி கேட்டவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் யார் யார் எல்லாம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.