close
Choose your channels

விஜய் டிவி பிரபலத்திற்கு பிக்பாஸ் அனுப்பிய கிஃப்ட்.. வைல்ட் கார்ட் எண்ட்ரியா?

Tuesday, October 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜய்க்கு பிக்பாஸ் கிப்ட் ஒன்றை அனுப்பி இருக்கும் நிலையில் அவர் இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னாள் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நிலையில் முதல் வாரமே இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியது பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும்

நாமினேஷனில் சிக்கி குறைந்த வாக்குகள் அடிப்படையில் அனன்யா ராவ் வெளியேற்றப்பட்ட நிலையில் தன்னால் இந்த நிகழ்ச்சியில் தொடர முடியாது என பவா செல்லத்துரையும் வெளியேறினார்.

இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரமே 16 போட்டியாளராக மாறி உள்ளதை அடுத்து வைல்ட் கார்டு என்ட்ரி இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது

இந்நிலையில் விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜய் தனக்கு பிக் பாஸ் இடம் இருந்து ஒரு கிப்ட் வந்திருப்பதாக கூறிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த கிஃப்டை அவர் திறந்து பார்க்கும் காட்சி அந்த வீடியோவில் உள்ளது

இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நாஞ்சில் விஜய் செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்த நிலையில், அவர் தனது மனைவியை விட்டு செல்வாரா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.