close
Choose your channels

மீரா சிறந்த போட்டியாளரா? கொதித்து எழும் சேரன்

Friday, July 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த வார கிராமத்து டாஸ்க்கில் சிறந்த டாஸ்க் வின்னர் நபரை தேர்வு செய்து அவர்களை அடுத்த வாரம் தலைவர் தேர்தலை போட்டியிட வைக்கும் நிலையில் சிறந்த டாஸ்க் வின்னர் பட்டியலில் மீராவின் பெயரும் இடம் பெறுகிறது.

மீராவின் பெயரை சாண்டி பரிந்துரை செய்ததாக தெரியும் நிலையில் இதற்கு முதலில் மதுமிதா கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றார். மீரா இந்த விளையாட்டை நன்றாக விளையாடியிருந்தாலும், அவர் தனிப்பட்ட வகையில் தனது பகைமையை மற்றவரிடம் காண்பித்துள்ளதாகவும், அதனால் அவர் சிறந்த டாஸ்க் வின்னராக தேர்வு செய்யப்படக்கூடாது என்றும் கூறுகிறார்.

சேரனும் மீராவை எப்படி சிறந்த டாஸ் வின்னராக தேர்வு செய்யலாம் என்றும், மீராவின் கேரக்டரில் அவ்வளவு தவறு இருப்பதாகவும், அந்த கேரக்டருக்கு
எப்படி பெஸ்ட் வின்னர் பட்டம் கொடுக்கலாம்? என்றும் கேள்வி எழுப்ப, மீராவை பரிந்துரை செய்த சாண்டிக்கு தர்மசங்கடமாகிறது

இதனால் கடும் கோபம் அடைந்த மீரா, மதுமிதாவுக்கே சிறந்த டாஸ்க் வின்னர் பட்டம் கொடுத்துவிடுங்கள் என்று கோபமாக கூறிவிட்டு வெளியே செல்கிறார்.

இந்த வாரம் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் வெறுப்பை மீரா சம்பாதித்துள்ளதால் வனிதாவை போலவே மீராவையும் பிக்பாஸே நினைத்தாலும் இந்த வாரம் அவர் வெளியேறுவதை தடுக்க முடியாது என்றே தோன்றுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.