close
Choose your channels

கவினை கன்னத்தில் அறைந்த பிரதீப் குறித்த பழைய 'செருப்பு' டுவீட் வைரல்!

Friday, September 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் உறவினர்கள் இந்த வாரம் வருகை தந்த நிலையில் கவின் வீட்டில் இருந்து மட்டும் யாரும் வரவில்லை. அதற்கு என்ன காரணம் என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு வந்த கவினின் நண்பர் பிரதீப், கவினின் கன்னத்தை பதம் பார்த்தார். நீ ஒருவேளை பிக்பாஸ் டைட்டில் வெற்றி பெற்றால் இந்த அறையை எனக்கு திருப்பி கொடுத்துவிடு என்றும் கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் பிரதீப்பின் பழைய புகைப்படங்களையும் பழைய டுவீட்டுக்களையும் நெட்டிசன்கள் தேட ஆரம்பித்துவிட்டனர். அவ்வாறு தேடியதில் ஒரு சுவாரஸ்யமான டுவீட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரதீப் குறித்து கவின் பதிவு செய்த ஒரு டுவீட் தற்போது வைரலாகியுள்ளது. அந்த டுவீட் இதுதான்:

யாரோ நல்லவங்க வீடு தேடி வந்து என் ரெண்டு செருப்பையும் திருடிட்டு போய்ட்டாங்க.. நீ தான் மைன்டுக்கு வந்த..! பேனிக் ஆவாத.. உன்ன சந்தேகப்படல.. உனக்கு ரெண்டு ஆப்ஷன் கொடுக்க வந்தேன்.. ஒன்னு எனக்கு புது செருப்ப வாங்கி தா.. இல்ல உனக்கு கொடுத்த என் செருப்ப திருப்பித்தா.. என கவின் பதிவிட்டிருக்கிறார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.