close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் செண்டிமெண்ட் ஆரம்பம்! உறவினர்கள் வருகை

Tuesday, September 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் குடும்பத்தினர்களை பிரிந்து வாடும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்த போட்டியாளர்களின் உறவினர்கள் சிறப்பு விருந்தினர்களாக வருகை தரும் நிகழ்வு நடப்பதுண்டு. அந்த வகையில் கடந்த இரண்டு சீசன்களை போலவே இந்த சீசனிலும் அந்த செண்டிமெண்ட் இன்று முதல் தொடங்குகிறது.

முதலில் முகினின் தாயார் பிக்பாஸ் வீட்டின் உள்ளே வருகிறார். தாயாரை பார்த்தும் துள்ளி குதிக்கும் முகின் அவரை கட்டிப்பிடித்து தூக்கி உற்சாகத்தில் குதிக்கின்றார். அதனையடுத்து முகினின் சகோதரி வருகிறார். சகோதரியை பார்த்ததும் தாயாரை விட்டுவிட்டு சகோதரை தூக்கி வைத்து கொஞ்சுகிறார். முகின் குடும்பத்தினர்களை பார்த்து மற்ற போட்டியாளர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர். இதனை சீக்ரெட் அறையில் இருந்து பார்த்து வரும் சேரனும் நெகிழ்ச்சி அடைகிறார்.

இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகையிலேயே போய்விடும் என்பதால் சண்டை சச்சரவுக்கு வாய்ப்பு குறைவு என கருதப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் கவின் குடும்பத்தில் ஒரு துரதிஷ்டமான சம்பவம் நடந்துள்ளதால் அவரது குடும்பத்தில் இருந்து யார் வரப்போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.