close
Choose your channels

இந்த வார தலைவர் போட்டி: கரவை மாட்டை கவிழ்த்த போட்டியாளர்கள்!

Friday, November 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய முதல் புரோமோவில் அடுத்த வாரம் தலைவர் போட்டிக்கான டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

இந்த போட்டியில் கார்டன் ஏரியாவில் ஒரு கரவை மாடு நிறுத்தப்பட்டிருக்கும் என்றும் அதில் அதிக அளவு பாட்டில்களில் பால் கறப்பவர்கள் தான் தலைவர் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் பிக்பாஸ் அறிவிக்கின்றார்.

இதனை அடுத்து பிக்பாஸ் அளித்த பாட்டில்களை எடுத்துக் கொண்டு கரவை மாட்டை நோக்கி போட்டியாளர்கள் ஓடுவதும் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு கறவை மாட்டின் மடியிலிருந்து பாலை கறக்க முயற்சிப்பதும் ஆன காட்சிகள் இன்றைய முதல் புறமோ வீடியோவில் உள்ளது.

ஒரு கட்டத்தில் கரவை மாடு திடீரென கவிழ்ந்து விட அப்படியும் விடாமல் அதன் மடியிலிருந்து பாலை கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்களின் பார்க்கும்போது இன்று தலைவர் போட்டிக்கான டாஸ்க்கில் செம காமெடி இருக்கிறது என்பது மட்டும் புரிய வருகிறது.

இந்த வார தலைவராக வருண் தனது காயினை பயன்படுத்தி இருந்து வரும் நிலையில் அடுத்த வாரம் யார் தலைவர் ஆவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.