close
Choose your channels

பிக்பாஸூக்கு ஓகே சொன்ன ப்ரியங்கா: ராஜூ ஜெயமோகனுக்கு செம கலாய்ப்பு!

Wednesday, October 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் போட்டியாளர்களில் பிரியங்கா ஒருவர் தான் பிக்பாஸ் வீட்டையே கலகலப்பாக வைத்டு இருக்கிறார் என்பதும் அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்து அவர் சொல்வதை கேட்டு சிரித்துக் கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய மூன்றாவது புரமோவில் தாமரைச்செல்வி, சின்னப்பொண்ணு மற்றும் ராஜூ ஜெயமோகன் ஆகிய மூவரும் பேசிக்கொண்டிருப்பதை அவர்களது உதட்டசைவில் இருந்து அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை பிரியங்கா காமெடியாக கூற, அதை சுற்றி நின்றவர்கள் கேட்டு சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருகட்டத்தில் திடீரென பிக்பாஸ் பிரியங்காவை மைக்கை சரியாக மாட்டுங்கள் என்று கூற அதற்கு ப்ரியங்கா எந்தவித பதட்டமும் இல்லாமல் ‘ஓகே பிக்பாஸ்’ என்று அதே சிரிப்புடனும் கேலியுடனும் கூறுவதுடன் இந்த மூன்றாவது புரோமோ வீடியோ முடிவடைகிறது. மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சியில் பிரியங்கா கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.