close
Choose your channels

கண்ணாடியை உடைத்து ஒரே களேபரம்.. பிக்பாஸ் டாஸ்க்கில் விபரீதம்..!

Thursday, October 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று போட்டியாளர்களுக்கு கொடுத்த டாஸ்கின் போது கண்ணாடி உடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்ச்சியில் ஆக்சிஜன் எமர்ஜென்சி என்ற டாஸ்க் வைக்கப்படுகிறது. அதில் ஸ்மால் ஹவுஸ் மற்றும் பிக் ப்ளவுஸ் ஆகிய இரண்டு வீட்டில் உள்ள போட்டியாளர்களில் அதிக சிலிண்டர்களை எடுத்து அதை பாதுகாத்து வைக்க வேண்டும் என்றும், எந்த வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அதிகமாக பாதுகாத்து வைத்திருக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பஸ்ஸர் அடித்தவுடன் போட்டியாளர்கள் போட்டி போட்டு கொண்டு கட்டிப்பிடித்து உருண்டு சிலிண்டர்களை எடுத்துக் கொண்டு பாதுகாக்கின்றனர். இந்த டாஸ்க்கின் போது திடீரென வீட்டில் உள்ள கண்ணாடி சிதறி உடைந்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து இந்த டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என பிக்பாஸ் அறிவித்துள்ளார். இன்றைய டாஸ்க்கில் ஏற்பட்ட விபரீதத்தால் பிக்பாஸ் என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.