close
Choose your channels

பாஜக மீது வெறுப்பு இருந்தாலும் விருது கிடைத்துள்ளது: சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகை

Friday, July 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

68வது தேசிய விருதுகள் சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சூர்யாவுக்கு ’சூரரைப்போற்று’ திரைப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி ’சூரரைப்போற்று’ திரைப்படத்திற்கு மொத்தம் 5 விருதுகள் கிடைத்து உள்ளன என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் நடிகையும் பாஜக பிரபலமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் சூர்யாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது: தேசிய விருது பெற்ற சூர்யாவுக்கு வாழ்த்துகள். பாஜக மீது வெறுப்பு இருந்தபோதிலும், பாரபட்சம் அடிப்படையில் விருதுகள் எதுவும் இல்லை. உங்கள் உண்மையான திறமை மற்றும் செயல்திறனுக்கான விருது’ என்று கூறியுள்ளார்.

மேலும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்ற ஜீவி பிரகாஷ்குமாருக்கும் தனது வாழ்த்துக்களை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.