close
Choose your channels

விஜய் ஒரு புத்திசாலி போட்டியாளர்.. அவருடன் மோதுவது நல்லது தான்: பாஜக நடிகை..

Tuesday, April 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஒரு புத்திசாலி என்றும் அவருடன் அரசியல் ரீதியாக மோதுவது நல்லது தான் என்றும் விஜய்யுடன் நடித்தவரும் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இருப்பவருமான பிரபல நடிகை ஒருவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் தற்போது தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திரையுலக பிரபலங்கள் சிலர் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நடிகை நமீதா தமிழகம் முழுவதும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நீலகிரியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல் முருகனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நடிகை நமீதா அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய் அரசியல் குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர் ’விஜய்யின் அரசியல் கட்சிக்கு தான் வாழ்த்து கூறிக் கொள்வதாக தெரிவித்தார். ஆனால் அதே நேரத்தில் விஜய் ஒரு புத்திசாலி, ஒரு புத்திசாலி உடன் அரசியல் ரீதியாக மோதுவது நல்ல விஷயம் தான் என்றும் கூறினார்.

விஜய் தனது முதல் அரசியல் அறிக்கையில் சாதி மத பேதம் இன்றி அரசியல் செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சிக்கு மறைமுக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாஜகவும் அவரை எதிர்க்க தயாராகி வருவதை நமீதாவின் பேட்டி கூறுவதாக கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

நடிகர் விஜய் உடன் ’அழகிய தமிழ் மகன்’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்த நடிகை நமீதா, 2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து பிரச்சாரம் செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.