close
Choose your channels

இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த டிரைலர்.. 'ஜவான்' குறித்து சொன்ன பிரபலம் யார் தெரியுமா?

Monday, August 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் நடிப்பில், அட்லி இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான ‘ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்கில் வெளியாகும் நிலையில் இந்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன.

ஏற்கனவே இந்த படத்தின் சிங்கிள் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் சென்னையில் ஒரு பிரமோஷன் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், அதில் விஜய் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் ‘ஜவான்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது ட்ரெய்லர் தயாராகி விட்டதாகவும் அந்த ட்ரெய்லரை பாலிவுட் திரையுலகின் பிரபலம் கரன் ஜோகர் பார்த்ததாகவும் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

சில நிமிடங்களுக்கு முன்பு ‘ஜவான்’ ட்ரைலரை பார்த்ததாகவும் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த ட்ரெய்லர் இதுதான் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து ட்ரெய்லருக்கும் படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி, யோகிபாபு, அம்ரிதா ஐயர் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் விஜய் மற்றும் சஞ்சய்தத் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்பட்டாலும் இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos