close
Choose your channels

யானைக்கு மதம் பிடிச்சுருச்சுன்னா அது எங்கேயும் ஓடி ஒளியாது: கேப்டன் விஜயகாந்த் வெளியிட்ட கிளிம்ப்ஸ் வீடியோ..!

Friday, August 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேப்டன் விஜயகாந்த் தனது மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோவின் பின்னணியில் யானைக்கு மதம் பிடித்திருந்தால் அது எங்கேயும் ஓடி ஒளியாது, எத்தனை பேர் எதிரில் வந்தாலும் நின்னு நிதானமா அடிக்கும். ஒரு படையோட வலிமை அதை வழிநடத்துபவனின் நம்பிக்கையில் தான் இருக்கிறது என்ற வசனம் இடம் பெற்றுள்ளது

சண்முக பாண்டியன், கஸ்தூரிராஜா, முனிஷ்காந்த், ஏ வெங்கடேஷ், யாமினி சந்தர், உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையில் யூ அன்பு என்பவரின் இயக்கத்தில் உருவாக்கி வரும் இந்த படத்தை டைரக்டர்ஸ் சினிமாஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

சதீஷ்குமார் ஒளிப்பதிவில், இளையராஜா படத்தொகுப்பில், பார்த்திபன் தேசிங்கு திரைக்கதை மற்றும் வசனத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில் அதிரடி ஆக்சன் காட்சிகள் இருப்பதை அடுத்து இந்த படம் நிச்சயம் சண்முகபாண்டியனுக்கு திருப்புமுனையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos