close
Choose your channels

கோப்பையுடன் கமல்ஹாசனை சந்தித்த சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் வீரர்கள்!

Monday, April 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் துபாயில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழகத்தின் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி மிக அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதற்கு கமல்ஹாசன் அவர்கள் ஏற்கனவே தனது பாராட்டுகளை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெற்றிக் கோப்பையுடன் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியினர் சற்றுமுன்னர் கமலஹாசனை சந்தித்து அவரிடம் ஆசி பெற்றனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக டிபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியினர் துபாய் செல்வதற்கு விசா மற்றும் டிக்கெட் எடுக்க முடியாத நிலை இருந்தபோது கமல்ஹாசன் அவர்கள் தான் அவர்களுக்கு விசா மற்றும் டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்து கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து வெற்றிக் கோப்பையுடன் வந்த சென்னை சூப்பர் ஸ்டார் அணியினர் கமல்ஹாசனை சந்தித்து தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.