close
Choose your channels

முதல் நாளும் கடைசி நாளும்.. சியான் விக்ரம் வெளியிட்ட  'தங்கலான்' புகைப்படங்கள்..!

Tuesday, July 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் இந்த படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விக்ரம் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஒரு கேரக்டருக்காக முழுமையான அளவில் தன்னை மாற்றி கொண்டு மெனக்கிடும் மிகச்சில நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்பதும் குறிப்பாக அவர் ‘தங்கலான்’ படத்துக்காக தன்னையே மாற்றிக் கொண்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்றுடன் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக விக்ரம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் ‘தங்கலான்’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு புகைப்படத்தையும் இறுதி நாள் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு 118 நாள் நடந்தது என்று அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் நடித்தது தனக்கு மிகப்பெரிய அனுபவம் என்றும் தன்னுடன் பணிபுரிந்தவர்கள் மிகவும் அற்புதமானவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உட்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.