close
Choose your channels

சினிமாவுக்கு வரும் 'குக் வித் கோமாளி' சுனிதா: ஹீரோ அவருக்கு மனசுக்கு பிடிச்சவர் தான்!

Saturday, August 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வருடங்களாக கோமாளியாக வந்தவர் சுனிதா என்பதும் இவர் பார்வையாளர்களின் மனதை கவர்ந்தவர் என்பதும் அனைவரும் அறிந்ததே. அவருடைய கொஞ்சலான தமிழ் பேச்சு மற்றும் காமெடி ரசிக்கும் வகையில் இருப்பதால் அவர் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’குக் வித் கோமாளி' சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகர் சந்தோஷ் பிரதாப் உடன் ஜோடி சேர்ந்த போதெல்லாம் தனது ரொமான்ஸை வெளிப்படுத்துவார் என்பதும் அவை பார்ப்பதற்கு ரசிக்கும் வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சந்தோஷ் பிரதாப் உடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ள சுனிதா அது குறித்த வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார். இது வெறும் டிரைலர் தான் என்றாலும் விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளிவரும் என்றும் அவர் தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.