close
Choose your channels

அரசியலில் குதித்த 'குக் வித் கோமாளி' ஷகிலா: எந்த கட்சியில் தெரியுமா?

Friday, March 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்த நடிகை ஷகிலா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் என்பது தெரிந்ததே. கடந்த வாரம் அவர் எலிமினேட் செய்யப்பட்டாலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்தார்கள் என்பதும் அவருடைய இமேஜ் மொத்தமாக மாறி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டாலும் இந்த வாரம் அவர் வைல்ட்கார்ட் நிகழ்ச்சியில் மீண்டும் கலந்து கொள்ள உள்ளார் என்றும் அவர் அனேகமாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை ஷகிலா திடீரென அரசியலில் குதித்துள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறையில் இணைந்துள்ளார் என்பதும், அவருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் உறுப்பினர் அட்டையை கொடுத்து வரவேற்றனர் என்பதும், இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திடீரென நடிகை ஷகிலா தமிழக அரசியலில் குதித்துள்ளது, குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறையில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.