close
Choose your channels

பெண் பிள்ளைகளை வளர்ப்பதை விட இதுதான் கஷ்டம்: 'குக் வித் கோமாளி' கனி வெளியிட்ட வீடியோ!

Monday, June 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் முடிவடைந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் கனி என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இன்னும் மூன்று மாதங்களில் குக் வித் கோமாளி சீசன் 3 தொடங்க இருப்பதாக கூறப்படுவது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் குக் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் கனி, ஏற்கனவே யூடியூபில் பொன்னியின் செல்வன் கதையை மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் கூறி வருகிறார் என்பது தெரிந்ததே. மேலும் இவர் பிரபல இயக்குனர் திரு மனைவி என்பதும் திரு-கனி தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவ்வப்போது தனது குடும்பத்தினரின் புகைப்படங்களையும் மகளின் புகைப்படங்களை பதிவு செய்து வரும் கனி, சற்று முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளின் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் கனியின் மகள் தனது முடியை ஸ்டைலாக காண்பிக்கும் காட்சி உள்ளது. இந்த வீடியோவுக்கு கேப்ஷனாக, ’பொண்ண வளர்க்குறதை விட கஷ்டம் அந்த பொண்ணு முடியை வளர்க்குறதுதான்’ என்று கனி பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.