close
Choose your channels

ரஜினி மகளின் திருமண தேதி!

Wednesday, January 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான '2.0' திரைப்படமும் இந்த ஆண்டு வெளியான 'பேட்ட' திரைப்படமும் நல்ல வசூலை குவித்து இரண்டு படங்களும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்த நிலையில் தொழில்ரீதியில் தனது படங்களுக்கு நல்ல வசூல் கிடைப்பதால் மகிழ்ச்சியுடன் இருக்கும் ரஜினிகாந்த், தனது இரண்டாவது மகள் திருமண தேதியையும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. வஞ்சகர் உலகம்' படத்தில் நடித்த நடிகரும் தொழிலதிபருமான விசாகனுடன் ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யாவின் திருமணம் வரும் பிப்ரவரி 11ஆம் தேதி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் லதா ரஜினி மற்றும் செளந்தர்யா ஆகியோர் திருப்பதி சென்று திருமண அழைப்பிதழை ஏழுமலையான் சந்நிதியில் வைத்து ஆசிபெற்றதாகவும் கூறப்படுகிறது. செளந்தர்யாவின் திருமண தேதியை ரஜினி குடும்பத்தினர் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.