close
Choose your channels

'விஐபி 2', 'தரமணி' படங்களில் 2வது வார வசூல் நிலவரம்

Monday, August 21, 2017 • தமிழ் Comments

இந்த வாரம் வியாழன் அன்று அஜித்தின் 'விவேகம்'  வெளிவரவுள்ளதை அடுத்து கடந்த வெள்ளியன்று எந்த தமிழ்ப்படமும் வெளியாகவில்லை. எனவே கடந்த 11ஆம் தேதி வெளியான தரமணி மற்றும் விஐபி 2 படங்களின் கடந்த வார இறுதி நாட்களில் சென்னை வசூல் குறித்து தற்போது பார்ப்போம்
 
தனுஷின் 'விஐபி 2' படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தபோதிலும் அது எந்தவிதத்திலும் வசூலில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. கடந்த வாரம் சென்னையில் 15 திரையரங்குகளில் 215 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.49,72,471 வசூல் செய்துள்ளது. மேலும் 85% பார்வையாளர்கள் திரையரங்கில் இருந்துள்ளனர். இந்த படம் சென்னைய்யில் ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 20வரையிலான பத்து தினங்களில் ரூ.3,24,57,709 வசூல் செய்துள்ளது.
 
ரிலீசுக்கு முன்னர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தாத 'தரமணி' திரைப்படம் ரிலீசுக்கு பின்னர் ரஜினி உள்பட பல பிரபலங்கள் கொடுத்த பாசிட்டிக் விமர்சனங்கள் காரணமாக இந்த படம் நல்ல வசூலை பெற்றுள்ளது. கடந்த வார இறுதி நாட்களில் சென்னையில் இந்த படம் 19 திரையரங்குகளில் 181 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.30,22,957 வசூல் செய்துள்ள்து. மேலும் இந்த படம் ஆகஸ்ட் 11 முதல் 20 வரை ரூ.1,04,74,393 வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz