close
Choose your channels

இரண்டு தேசிய விருதுகளை பெற்றது 'அசுரன்': படக்குழுவினர் மகிழ்ச்சி

Monday, March 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

67வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட இருப்பதாக ஏற்கனவே தகவல் வந்த நிலையில் சற்று முன் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது

இந்த தேசிய விருதில் தனுஷின் ’அசுரன்’ திரைப்படம் கண்டிப்பாக இரண்டு அல்லது மூன்று விருதுகளை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே சற்று முன் வெளியான தேசிய விருதுகள் குறித்த அறிவிப்பில் ’அசுரன்’ படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளது

’அசுரன்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. ஏற்கனவே ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது பெற்ற தனுஷ், தற்போது இரண்டாவது முறையாக இந்த விருதினை பெறுகிறார்.

இதே போல் ’அசுரன்’ படத்தை இயக்கிய இயக்குனர் வெற்றிமாறனுக்கு சிறந்த இயக்குனர் விருது கிடைத்துள்ளது. இதனையடுத்து ’அசுரன்’ படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கும் நிலையில் திரையுலகினர் தனுஷ் மற்றும் வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.