close
Choose your channels

தனுஷின் 'DD3': செம்ம அப்டேட்டை வெளியிட்டதால் ரசிகர்கள் குஷி..!

Friday, December 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷின் 50 படமான ’D50’ என்ற படத்தை அவரே இயக்கி வந்த நிலையில் இந்த படம் அவரது இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படம் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் இந்த படத்தில் அவருடைய சகோதரி மகன் தான் ஹீரோவாக நடித்து வருகிறார் என்றும் செய்திகள் வெளியானது. மேலும் இந்த படத்தின் நாயகி ஆக அனிகா சுரேந்திரன் நடித்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ’DD3’ என்ற படத்தின் முக்கிய அறிவிப்பு டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் என தனுஷ் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அனேகமாக இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அன்றைய தினம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இது குறித்த ஸ்டில் ஒன்றையும் தனுஷ் வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. வானத்தில் அடுத்தடுத்து இரண்டு நிலாக்கள் D வடிவில் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அதன் பக்கத்தில் 3 என்ற எழுத்து உள்ளதை பார்க்கும் போது டைட்டிலுக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos