close
Choose your channels

'நானே வருவேன்' படத்தின் மாஸ் போஸ்டர்கள்: புதிய அப்டேட் தந்த தயாரிப்பாளர்!

Saturday, October 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’நானே வருவேன்’ என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது என்பதும், இந்த படத்தின் புதிய அப்டேட் இன்று காலை வெளியாகும் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் நேற்று அறிவித்து இருந்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் கலைபுலி எஸ் தாணு அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’நானே வருவேன்’ படத்தின் மாஸ் போஸ்டர்களை வெளியிட்டுள்ளார்.. இந்த போஸ்டர்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

’இடைவிடாத படப்பிடிப்பு இனிதே ஆரம்பம்’ என்று அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள நிலையில் இன்று முதல் தொடங்கி விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெறும் என்றும் ஒருசில மாதங்களுக்குள் படப்பிடிப்பு முடிவடைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகவிருக்கும் இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.