close
Choose your channels

இன்று முதல் தொடங்குகிறது தனுஷின் இரண்டாவது முயற்சி

Friday, July 13, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று முதல் தொடங்குகிறது தனுஷின் இரண்டாவது முயற்சி

நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், என பல அவதாரங்களில் கோலிவுட் திரையுலகில் ஜொலித்து கொண்டிருந்த தனுஷ், கடந்த ஆண்டு 'பா.பாண்டி' என்ற படத்தின் மூலம் இயக்குனரானார். ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தனுஷ் இயக்கிய முதல் படமே நல்ல ஹிட்டானதால் அவர் விரைவில் இன்னொரு படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது

இந்த நிலையில் இன்று முதல் தனுஷ் இயக்கவுள்ள இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சென்னை அருகே இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும், இந்த படத்தில் தனுஷ் முக்கிய கேரக்டரில் நடிக்கவும் உள்ளதாகவும், இந்த படம் பெரிய பட்ஜெட் படம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் மிக விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'வடசென்னை' மற்றும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய இரண்டு படங்களும் இறுதிக்கட்ட பணியில் இருப்பதால் இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியும் மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.