close
Choose your channels

தனுஷுக்கு டான் ஆகும் இயக்குனர் சிவா

Wednesday, August 10, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'வடசென்னை' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் ஜெயில் செட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் இயக்குனர் சுப்பிரமணியம் சிவா தற்போது ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியான 'திருடா திருடி' மற்றும் சீடன்' ஆகிய படங்களை இயக்கியவர்தான் இந்த சுப்பிரமணியம் சிவா என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே 'வடசென்னை' படத்தில் டேனியல் பாலாஜி மற்றும் கிஷோர் ஆகியோர் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வரும் நிலையில் இயக்குனர் சிவா, இந்த படத்தில் 'டான்' ஆக நடிக்கவுள்ளராம்.
மேலும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய்சேதுபதியும் அவருக்கு மனைவியாக ஆண்ட்ரியா நடிக்கவுள்ளதாகவும் சமீபத்தில் வெளிவந்த செய்தியை அடுத்து தற்போது இயக்குனர் சிவாவும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.