close
Choose your channels

செஞ்சுரி அடித்தது சந்தானத்தின் 'தில்லுக்கு துட்டு'

Tuesday, July 12, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த வாரம் வெளியான சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று நான்கே நாட்களில் ரூ.13.5 கோடி வசூல் செய்தது என்பதை நேற்று பார்த்தோம். குறிப்பாக சென்னையில் இந்த படம் கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது.
இந்நிலையில் சென்னை மாயாஜால் திரையரங்க வளாகத்தில் 'தில்லுக்கு துட்டு' திரைப்படம் 100 காட்சிகள் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி சாதனை செய்துள்ளது. ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் வெளிவந்த பாசிட்டிவ் விமர்சனங்களே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளது. இதுவரை வெற்றிகரமான காமெடி நடிகராக கோலிவுட்டில் வலம் வந்த சந்தானம், தற்போது வெற்றிகரமாக நாயகனாக மாறியது மட்டுமின்றி வசூல் மன்னனாகவும் விளங்குகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.