close
Choose your channels

சந்தானம் பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்

Friday, September 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட்டில் முன்னணி நகைச்சுவை நடிகரான சந்தானம் ஹீரோவாக நடித்த 'தில்லுக்கு துட்டு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் இயக்குனரான 'லொள்ளுசபா' ராம்பாலா, தற்போது தனது இரண்டாவது படத்தை விரைவில் தொடங்கவுள்ளார்.
ராம்பாலாவின் 2வது படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த் படத்தை ஸ்டீவ்ஸ் கார்னர் நிறுவனத்தின் ஸ்டேபன் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ், கடவுள் இருக்கான் குமாரு', 'புரூஸ்லீ', ராஜீவ் மேனன் படம்' 'அடங்காதே' போன்ற படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.