close
Choose your channels

போட்டியாளரிடம் வாழ்த்து பெற்ற விஜய்

Friday, January 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'பைரவா' வரும் 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. ரிலீசுக்கு இன்னும் 6 நாட்களே இருப்பதால் 'பைரவா' காய்ச்சலில் உள்ள விஜய் ரசிகர்கள் இந்த படத்தை வரவேற்க தயாராக உள்ளனர்.
மேலும் 'பைரவா' வெளியான மறுநாள் புரூஸ்லீ' மற்றும் 'புரியாத புதிர்' ஆகிய படங்களும், ஜனவரி 14ஆம் தேதி 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படமும் வெளிவருகின்றது
இந்நிலையில் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தின் இயக்குனர் பார்த்திபன், விஜய்யின் 'பைரவா' வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் சினிமா மூன்று எழுத்து , விஜய் மூன்று எழுத்து , பைரவா மூன்று எழுத்து, வெற்றி மூன்று எழுத்து, வாழ்த்தும் நான் சினிமா ரசிகன் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் அந்த வீடியோவில், 'ஒரு பெரிய படத்தை வரவேற்பதன் முலம் பொங்கல் கோலாகலமாக ஆரம்பிக்க உள்ளது. 'பைரவா' படத்தை பார்த்து முடித்த பின்னர் என்னுடைய 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்திற்கு வாருங்கள். நிச்சயம் உங்களை சந்தோஷப்படுத்தும் அளவுக்கு இந்த படம் இருக்கும்' என்று பார்த்திபன் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.