close
Choose your channels

தனுஷ்-லட்சுமிமேனன் ஜோடி சேருவது உண்மையா? இயக்குனர் விளக்கம்

Monday, October 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த 'வடசென்னை' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் 'மாரி 2' படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்களின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் 'ராட்சசன்' பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் ஒரு த்ரில் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் ஆரம்பமாகும் என தெரிகிறது. இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.

இதுகுறித்து இயக்குனர் ராம்குமார் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'வணக்கம். ராட்சசனுக்கு பிறகு தனுஷ் அவர்களுடனான திரைப்படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பணியே இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறோம். அதற்க்குள்ளாகவே கதை நாயகி குறித்த தவறான தகவல்களை யாரும் வெளியிட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். நன்றி' என்று கூறியுள்ளார். இதிலிருந்து இந்த படத்தின் நாயகி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.