close
Choose your channels

5வது முறையாக அஜித்துடன் இணைகிறாரா பிரபல இயக்குனர்? மறுபடியும் ஒரு சக்சஸ் கன்பர்ம்..!

Saturday, February 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித்தை வைத்து 4 படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஒருவர் ஐந்தாவது முறையாக இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஜித் நடித்த ’வீரம்’ ’வேதாளம்’ ’விவேகம்’ மற்றும் ’விஸ்வாசம்’ ஆகிய நான்கு படங்களை இயக்கியவர் இயக்குனர் சிறுத்தை சிவா. தற்போது இவர் சூர்யா நடித்து வரும் ’கங்குவா’ என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் ’கங்குவா’ படத்தை அடுத்து அஜித்தின் 64 ஆவது படத்தை சிறுத்தை சிவா இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அஜித்தின் 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ள நிலையில், இந்த படத்தின் பூஜை ஏற்கனவே நடந்து தற்போது ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அஜித்தின் 63வது படத்தை முடித்தவுடனும், சிறுத்தை சிவாவும் ’கங்குவா’ படத்தை ரிலீஸ் செய்த பின்னர், ‘அஜித் 64’ படத்தின் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

அஜித் மற்றும் சிறுத்தை சிவா இணைந்த நான்கு படங்களும் நல்ல வெற்றி பெற்ற நிலையில் ஐந்தாவது முறை இணையும் படமும் சக்சஸ் கன்பார்ம் என்று அஜித் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.