close
Choose your channels

தமிழிசைக்கு மட்டும் பிரச்சாரம் செய்ய மாட்டேன்: பிரபல இயக்குனர்

Saturday, March 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுக கூட்டணியில் ஐந்து தொகுதிகளை பெற்ற பாஜக, தூத்துகுடி, கன்னியாகுமரி, சிவகெங்கை, கோயமுத்தூர், இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்களையும் சமீபத்தில் அறிவித்தது. இதில் தூத்துகுடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் போட்டியிடுவதால் இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது.

இந்த நிலையில் தமிழிசையை வெற்றி பெற வைக்க பாஜகவினர்களும் கூட்டணி கட்சி தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் பாஜகவில் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருபவரும், கடந்த 80கள் மற்றும் 90களில் பிரபலமான இயக்குனராக இருந்தவருமான விசு, 'தமிழிசைக்கு மட்டும் பிரச்சாரம் செய்ய மாட்டேன்' என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து விசு பேட்டி ஒன்றில் கூறியபோது, 'பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். ஆனால், தமிழிசைக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மாட்டேன். கட்சியில் உறுப்பினராகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. இதுவரை ஒருமுறை கூட கட்சியின் மாநில தலைவர் தமிழிசையை சந்திக்க முடியவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.