close
Choose your channels

எனக்கு யாரும் ஆன்மீக பாடம் எடுக்க வேண்டாம்.. நடராஜர் டாட்டூவை முதுகில் வைத்த 'லியோ' நடிகையின் விளக்கம்..!

Monday, February 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யின் ‘லியோ’ படத்தில் நடித்துவரும் நடிகை நடராஜர் டாட்டூவை தனது முதுகில் பதிவு செய்துள்ள நிலையில் 'எனக்கு யாரும் ஆன்மீகம் குறித்து பாடம் எடுக்க வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்தில் த்ரிஷா மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க சமீபத்தில் இணைந்தவர் நடிகை அபிராமி வெங்கடாசலம் என்பதை பார்த்தோம். இவர் விரைவில் ‘லியோ’ படப்பில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிவராத்திரி தினத்தில் காளகஸ்தியில் செம நடனமாடிய வீடியோவை அபிராமி வெங்கடாசலம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த நிலையில் அந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் நடராஜர் திருவுருவத்தை தனது முதுகில் டாட்டூவாக குத்திய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில் ’பக்தி குறித்து எனக்கு யாரும் பாடம் கற்றுத் தர வேண்டாம், என் சிவனை எங்கே வைக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட விஷயம்’ என்று கூறியுள்ளார். மேலும் அவர் சிவபெருமானின் பாடலையும் பதிவு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.