close
Choose your channels

'விடாமுயற்சி' படப்பிடிப்பு தாமதம் எதிரொலி.. அதிரடி முடிவெடுத்த அஜித்.. வைரல் புகைப்படம்..!

Tuesday, March 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மார்ச் 15ஆம் தேதி முதல் தொடங்கும் என்று செய்திகள் வெளியானது. ஆனால் ஒரு சில காரணங்களால் ’விடாமுயற்சி’ படப்பிடிப்பு தள்ளி போனதாக கூறப்படும் நிலையில் அஜித் அதிரடி முடிவெடுத்து தனது அடுத்தகட்ட பைக் டூரை தொடங்கி விட்டதாக தெரிகிறது.

அஜித் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் பைக்கில் டூர் செல்லும் திட்டத்தை செயல்படுத்தினார் என்பதும் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்த அவர் சில ஐரோப்பிய நாடுகளிலும் பைக்கில் பயணம் செய்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ’விடாமுயற்சி’ படப்பிடிப்பு காரணமாக பைக் டூரை தற்காலிகமாக ஒத்தி வைத்திருந்த அவர் தற்போது படப்பிடிப்பு தாமதம் ஆகி வருவதை அடுத்து அவர் மீண்டும் பைக் டூருக்கு கிளப்பி விட்டார் என்பது தெரிய வந்துள்ளது.

அஜித் அட்டகாசமாக பைக் டூர் சென்ற இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர். அஜித் பைக் டூருக்கு மீண்டும் கிளம்பி விட்டதை அடுத்து ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு எப்போது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் வரும் ஜூன் மாதம் திட்டமிட்டபடி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.