close
Choose your channels

சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர்..!

Wednesday, April 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ள நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் ’எஸ்கே 21’. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் நாயகி ஆக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைப்பாளர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் பல படங்களில் பிசியாக இருப்பதால் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் முதல் முறையாக சிவகார்த்திகேயன் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் நடித்த பெரும்பாலான திரைப்படங்களுக்கு அனிருத் மற்றும் டி. இமான் ஆகிய இருவரும் மாறி மாறி இசையமைத்து வரும் நிலையில் ஜிவி பிரகாஷ் உடன் அவர் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற இருப்பதாகவும் அதற்காக விரைவில் படக்குழுவினர் காஷ்மீர் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.