close
Choose your channels

அரசியலுக்கு வருகிறாரா அஜித்? முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பரபரப்பு பேட்டி..!

Thursday, May 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அஜித் அரசியலுக்கு வருவது குறித்த அறிகுறியே இல்லாத நிலையில் அவர் அரசியலுக்கு வந்தால் நாங்கள் அவரை வரவேற்போம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் சென்னையில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரை உலகை சேர்ந்த பலர் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்துள்ளனர் என்பதும் சிவாஜிகணேசன், சரத்குமார், விஜயகாந்த் முதல் கமல்ஹாசன் வரை ஏராளமான நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்தனர் என்பதும் தெரிந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட தளபதி விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார் என்றும் அவர் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி நடிகர் விஷால் அரசியலுக்கு வரப்போவதாகவும் 2026 ஆம் ஆண்டு அரசியல் களம் காண இருப்பதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் அஜித் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா? என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ’நல்லது செய்வதற்கான பரந்த களம் தான் அரசியல் என்றும் அப்படிப்பட்ட களத்திற்கு அஜித்குமார் வந்தால் நாங்கள் கண்டிப்பாக அவரை வரவேற்போம்’ என்றும் தெரிவித்துள்ளார்.

ஜெயகுமார் கூறியபடியே அஜித் அரசியலுக்கு வருவாரா? வந்தாலும் அதிமுகவை ஆதரிப்பாரா? என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.