close
Choose your channels

ஜெயலலிதா கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன்? பிரபல இயக்குனரின் வெப் சீரீஸ்

Tuesday, December 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை பிரியதர்ஷினி என்ற இயக்குனர் 'தி அயர்ன் லேடி' என்ற பெயரில் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்ததை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இயக்குனர் பாரதிராஜா, ஏ.எல்.விஜய் உள்பட இன்னும் ஒருசில இயக்குனர்களும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டது

இந்த நிலையில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தொலைக்காட்சி தொடராக இயக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தொடர் 30 எபிசோட்களாக இருக்கும் என்றும், ஜெயலலிதா வேடத்தில் ரம்யாகிருஷ்ணன் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னணி தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகவுள்ள இந்த தொடரில் இந்திரஜித், வினிதா உள்பட பலர் நடிக்கவிருப்பதாகவும், எம்ஜிஆர், சசிகலா உள்பட பல கேரக்டர்களுக்கு நடிகை, நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.