close
Choose your channels

லோகேஷுக்காகத்தான் 'லியோ' படத்தில் நடித்தேன், என் கேரக்டர் இதுதான்: கெளதம் மேனன்..!

Saturday, May 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லோகேஷ் கனகராஜ் பலமுறை கேட்டுக் கொண்டதற்காக தான் ‘லியோ’ படத்தில் நடித்தேன் என ஊடகம் ஒன்றுக்கு இயக்குனர் கெளதம் மேனன் பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறிய போது ’விக்ரம்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க எனக்கு லோகேஷ் வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அந்த படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. ‘லியோ’ படத்திற்கு ஒப்பந்தம் ஆனவுடன் முதலில் எனக்கு தான் போன் செய்தார். இந்த படத்தில் நீங்கள் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வேண்டும், என்னுடைய டீம் அனைவரிடமும் கேட்டுவிட்டேன், இந்த கேரக்டருக்கு கௌதம் மேனன் நடித்தால் தான் சரியாக இருக்கும் என்று சொன்னார்கள். எனவே நீங்கள் கண்டிப்பாக இந்த வேடத்தில் நடிக்க வேண்டும் என்று கூறினார்’

’அப்படி என்ன கேரக்டர்’ என்று கேட்ட போது அவர் என் கேரக்டரை விளக்கியபோது நான் ஆச்சரியமடைந்தேன். விஜய் கூடவே ட்ராவல் செய்யும் கேரக்டரில் நடித்துள்ளேன். மிஷ்கினுடன் எனக்கு இந்த படத்தில் பெரிய அளவில் காட்சிகள் இல்லை, ஆனால் த்ரிஷாவுடன் எனக்கு காட்சிகள் இருக்கிறது, எனக்கு மிகவும் பிடித்த நடிகை த்ரிஷா, அவருடன் நான் ஏற்கனவே பணி புரிந்திருக்கிறேன் என்பதால் இந்த படத்தில் நடித்தபோது எனக்கு மிகவும் எளிதாக இருந்தது’

லோகேஷ் மற்றும் அவருடைய உதவியாளர்கள் அனைவரும் என்னுடன் மிகவும் நட்பாக இருந்தார்கள். லோகேஷின் ஐடியாலஜி மற்றும் அவரது பணி புரியும் தன்மை எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். எனவே இந்த படத்தில் நான் நடித்தது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று கௌதம் மேனன் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.