close
Choose your channels

'குறட்டை நிக்கிற வரைக்கும் நான் வேற ரூம்ல படுத்துக்கிறேன்': 'குட்நைட்' டிரைலர்..!

Tuesday, May 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யாவின் ’ஜெய் பீம்’ படத்தில் நடித்த மணிகண்டன் முக்கிய கேரக்டரில் நடித்த ’குட் நைட்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஒரு குறட்டையால் கணவன் மனைவியிடையே ஏற்படும் பிரச்சனை, அதற்கு என்ன தீர்வு என்பதை காமெடி கலந்த ரொமான்ஸ் படமாக இந்த படம் உருவாகியுள்ளது. மணிகண்டன் ஜோடியாக மீதா ரகுநாத் நடித்துள்ள இந்த படத்தில் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைத்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க காமெடி அம்சம் கொண்டது என்பதால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வரும் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.