close
Choose your channels

'பாகுபலி 2' விநியோகிஸ்தருடன் கைகோர்க்கும் 'மாநாடு' தயாரிப்பாளர்!

Wednesday, November 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’பாகுபலி 2’ திரைப்படத்தை அமெரிக்காவில் ரிலீஸ் செய்த நிறுவனத்துடன் ‘மாநாடு’ தயாரிப்பாளர் கைகோர்த்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏற்கனவே தமிழகம் உள்பட உள்நாட்டு வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது ‘மாநாடு’ திரைப்படத்தை அமெரிக்காவில் கிரேட் இந்தியா பிலிம்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்நிறுவனம் தான் ஏற்கனவே ’பாகுபலி-2 படத்தை’ அமெரிக்காவில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘மாநாடு’ திரைப்படத்தை அமெரிக்காவில் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வெளியிட கிரேட் இந்தியா பிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கும் இந்த படத்தில் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், மனோஜ், டேனியல், பிரேம்ஜி அமரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.