close
Choose your channels

ஜி.வி.பிரகாஷின் 'கடவுள் இருக்கான் குமாரு' டிராக் லிஸ்ட்

Saturday, October 8, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படத்தின் பாடல்கள் வெளியீடு வெகுவிரைவில் நடைபெறவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டிராக் லிஸ்ட் வெளியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷின் இசையில் மறைந்த கவிஞர் நா.முத்துகுமார் எழுதிய பாடல்களில் டிராக்லிஸ்டை தற்போது பார்ப்போம்.
1. லோக்கல் பாய்ஸ் என்று தொடங்கும் முதல் பாடலை ஜி.வி.பிரகாஷ், கென், கிரேஸ், கருணாஸ் ஆகியோர் பாடியுள்ளனர். இந்த ஒரு பாடலை மட்டும் பாபூ சாஷி மற்றும் கருணாஸ் இசையமைத்துள்ளனர். கே.ஆர்.தரன் மற்றும் கருணாஸ் பாடலை எழுதியுள்ளனர்.
2. நீ போனா தெருவுல என்ற பாடலை ஜி.வி.பிரகாஷ், விக்கி, விஷ்ணுப்ரியா ரவி ஆகியோர் பாடியுள்ளனர்,
3. கம் ஜாரி என்று தொடங்கும் பாடலை ஜி.வி.பிரகாஷ், அல் ரூபம், மாளவிகா சுந்தர் ஆகியோர் பாடியுள்ளனர்.
4. ஹேய் பாத்துப் போடி என்று தொடங்கும் பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார்.
5. இரவினில் ஆட்டம்' என்று தொடங்கும் பாடலை கானா பாலா மற்றும், கோவை சரளா பாடியுள்ளனர். இந்த பாடல் 'நவராத்திரி' படத்தில் இடம்பெற்ற பாடலின் ரீமிக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.