close
Choose your channels

ரம்யா கிருஷ்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Thursday, September 15, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'படையப்பா' நீலாம்பரி முதல் 'பாகுபலி' சிவகாமி வரை தனது வித்தியாசமான, கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ரம்யாகிருஷ்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
ஒரு நடிகை ஐந்து வருடம் திரையுலகில் இருப்பதே பெரிய விஷயமாக கருதப்படும் நிலையில் 30ஆண்டுகளுக்கும் மேல் தென்னிந்திய திரையுலகில் ஜொலித்து வரும் ரம்யாகிருஷ்ணன் இன்றளவும் பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன், தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து புகழ் பெற்றவர்
சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த ரம்யா கிருஷ்ணன் தற்போது கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு, மற்றும் பாகுபலி 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்
தென்னிந்திய திரையுலகில் இன்னும் பல வெற்றிகளை ரம்யா கிருஷ்ணன் குவிக்க இந்த பிறந்த நாளில் மீண்டும் ஒருமுறை அவருக்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.