close
Choose your channels

திரிஷாவின் இடத்தை பிடித்த பிந்து மாதவி

Wednesday, January 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல தொழிலதிபர் வருண்மணியனுடன் நடிகை த்ரிஷாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் ஏற்பட்டு பின்னர் அது திருமணம் வரை செல்லாமல் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர் என்பது அனைவரும் அறிந்ததுதான்.
இந்நிலையில் த்ரிஷா விட்டுபோன இடத்தை தற்போது இன்னொரு பிரபல நடிகையான பிந்துமாதவி பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பிந்துமாதவியே சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததாகவும், ஆனால் திடீரென அவரே அந்த புகைப்பட பதிவுகளை நீக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் இருவரும் நெருக்கமாக பல இடங்களில் சுற்றி திரிவதாகவும் விரைவில் திருமண அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் வதந்திகள் மிக வேகமாக பரவி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.