close
Choose your channels

நான் கர்ப்பம் என்று எனக்கே தெரியாது: எமி ஜாக்சன்

Tuesday, April 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கிய '2.0' திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நடிகை எமிஜாக்சன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். திருமணம் ஆகாமல் கர்ப்பமாக இருப்பது குறித்து எமிஜாக்சன் மீது விமர்சனங்கள் எழுந்தாலும்,  லண்டனை சேர்ந்த எமிஜாக்சன் அந்த விமர்சனங்களை கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 'நான் கர்ப்பமாக இருப்பது எனக்கே ஆறு வாரங்களுக்கு தெரியாது என்றும், கர்ப்பம் என்று தெரிந்தவுடன் தேவையான சிகிச்சைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தான் இப்போதும் இந்தியா, இலங்கை, நியூயார்க் என சுற்றி வருவதாகவும் குழந்தை பிறந்த பின்னர்  எனது மகன் அல்லது மகள் என்னுடன் உலகை சுற்றுவார்கள்' என்றும் தெரிவித்துள்ளார்.

விரைவில் தொழிலதிபர் ஜார்ஜை திருமணம் செய்யவுள்ள எமிஜாக்சன் திருமணத்திற்கு பின் குழந்தையை பொறுப்பாக கவனித்து கொள்ளவிருப்பதாகவும், தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.