close
Choose your channels

விஜய் ரெடின்னா, நானும் ரெடி.. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேட்டி..!

Wednesday, July 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய் ரெடி என்றால் நானும் ரெடி என்று பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படம் ஆன ’ஜெனி’ படத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது. வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 25 வது படமான இந்த படத்தில் ஜெயம் ரவி, கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி ஷெட்டி மற்றும் வாமிகா கபி உள்பட பலர் நடிக்க உள்ளனர். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஜெனி’ படத்தின் துவக்க விழாவை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஐசரி கணேஷ் 'நடிகர் விஜய், வேல்ஸ் உடன் படம் பண்ண ரெடி என்றால் வேல்ஸ் பிலிம்ஸும் ரெடி என்று தெரிவித்தார்.

மேலும் கமல் தயாரிப்பில் சிம்பு நடிப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று அதை நாங்கள் பேசி தீர்த்துக் கொள்வோம் என்றும் எங்கள் இருவருக்கும் இருப்பது அண்ணன் தம்பி பிரச்சனை தான் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் சிம்பு பெரிய ஆளாக வரவேண்டும் என்பதே என்னுடைய ஆசை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் டி ராஜேந்தர் அவர்களை எனக்கு 32 ஆண்டுகளாக தெரியும், அவர் எங்கள் குடும்ப நண்பர், எனவே எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இருக்காது’ என்றார்.

அதேபோல் நடிகர் சங்க கட்டிடத்தை தற்போது உள்ள நடிகர் சங்கம் கட்டி முடிக்கும் என நம்புகிறேன் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.