close
Choose your channels

சுஹாசினி முதல் லட்சுமி ராமகிருஷ்ணன் வரை.. பெண் இயக்குனர்களின் படங்களில் இசைஞானி..!

Thursday, September 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைஞானி இளையராஜா கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரை உலகில் இசை அமைப்பாளராக இருந்து வருகிறார் என்பதும் அவர் பல இயக்குனர்களிடம் பணிபுரிந்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

தனது முதல் பட இயக்குனர் தேவராஜ் மோகன் முதல் ஏசி திருலோகசந்தர், கே விஜயன், எஸ் பி முத்துராமன், பாரதிராஜா, ஸ்ரீதர், மகேந்திரன், பாலச்சந்தர், ஐவி சசி, ஆர்சி சக்தி, ஏ ஜெகநாதன் உட்பட பல பழம்பெரும் இயக்குனர்கள் முதல் இன்றைய தலைமுறை இயக்குனர்களான சுசீந்திரன், கௌதம் மேனன், சமுத்திரகனி, மணிகண்டன், பிரியதர்ஷன், ராதா மோகன், சீனு ராமசாமி, வெற்றிமாறன், வெங்கட் பிரபு உள்ளிட்டோர் இயக்கிய படங்களில் அவர் இசையமைத்துள்ளார்

இந்த நிலையில் அவர் ஐந்து பெண் இயக்குனர்களின் படங்களுக்கு இசைஞானி இசையமைத்துள்ளார் என்பது ஆச்சரியமான தகவலாகும். முதல் முறையாக சுகாசினி மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 1991ஆம் ஆண்டு உருவான ’பெண்’ என்ற தொலைக்காட்சி தொடருக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தார். அதன் பிறகு விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் இயக்கத்தில் கடந்த 1992ஆம் ஆண்டு உருவான ’இன்னிசை மழை’ என்ற படத்திற்கும் இசைஞானி இசையமைத்தார்.

மேலும் பி பானுமதி இயக்கத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான ’பெரியம்மா’ என்ற படத்திற்கும் , சுமதி ராம் என்பவர் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ’விஸ்வதுளசி’ படத்திற்கும் இசைஞானி தான் இளையராஜா இசையமைத்தார்.



இந்த நிலையில் தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’ஆர் யூ ஓகே பேபி’ என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரை உலகில் 5 பெண் எனக்கு இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா தான் என்பது ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியமான தகவலாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos