close
Choose your channels

'தளபதி 61' படத்தில் மாயாஜாலம் செய்யும் விஜய்யின் 3வது கேரக்டர்

Friday, May 12, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐரோப்பிய நாடுகளில் வெற்றிகரமாக நடந்து வருகிறது. அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படப்பிடிப்பில் விஜய், காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள், பாடல்கள் ஆகியவை படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விஜய், இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. கிராமத்து தலைவர் வேடம் மற்றும் அவரது இரண்டு மகன்கள் வேடங்களில் விஜய் நடித்து வருகிறார். இதில் ஒரு மகன் டாக்டர் என்பதும், அவருக்கு ஜோடி காஜல் அகர்வால் என்றும் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது விஜய்யின் கேரக்டர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
இந்த படத்தில் மூன்றாவது கேரக்டராக விஜய், மாயஜாலம் செய்யும் மந்திரவாதியாக நடித்து வருபவதாகவும், அவருக்கு ஜோடியாகத்தான் சமந்தா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மாயாஜாலம் செய்யும் இந்த கேரக்டர் படத்தின் கதைக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.