close
Choose your channels

9 வருடங்களுக்கு பின் நிகழும் விஜய்-சூர்யா ஆச்சரிய மோதல்

Friday, December 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

Ilayathalapathy Vijay Bairavaa Suriya S3 clash on Pongal 2017

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பைரவா' திரைப்படம் விஜய் ரசிகர்களுக்காக பொங்கல் தினத்தில் ரிலீஸ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டிசம்பர் 23ஆம் தேதி ரிலீஸ் ஆக வேண்டிய சூர்யாவின் 'எஸ் 3' திரைப்படமும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் விஜய், சூர்யா படங்கள் மீண்டும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகின்றது மட்டுமின்றி இயக்குனர்கள் பரதன் மற்றும் ஹரி இயக்கிய படங்களும் மீண்டும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகின்றது.

விஜய் நடிப்பில் பரதன் இயக்கிய 'அழகிய தமிழ்மகன்' படமும் ஹரி இயக்கிய 'வேல்' திரைப்படமும் கடந்த 2007ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன நிலையில் ஒன்பது வருடங்கள் கழித்து அதே பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த 'பைரவா' படமும், அதே ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த 'எஸ் 3' படமும் ரிலீஸ் ஆவது ஆச்சரியமான ஒன்றாக கோலிவுட்டில் கருதப்படுகிறது.

கடந்த முறை ஹரி-சூர்யா கூட்டணியின் 'வேல்' வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை வெற்றி பெறப்போவது யார்? என்பதை அறிய விஜய், சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனாலும் இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் இரண்டுமே வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.